களையெடுங்கள் கவன குறைவுகளை

அத்திப் பூத்தாற்போல அங்குமிங்கு மழை
அனல் பறந்திட்ட சென்னையும் மாறியது !
இயற்கையின் விளைவால் இடித்தது
இதயத்தில் விழுந்தது பேரிடி ஒன்று !

செய்திகள் வந்தன செயலற்று போனோம்
நெஞ்சைப் பிளந்தது கண்டிட்ட காட்சிகள் !
கம்பீரமாய் நின்ற அடுக்குமாடி கட்டடமோ
கணநேரத்தில் சரிந்தது மண்மேடாய் ஆனது !

சிக்கித் தவித்தவரில் சிலரோ மாண்டனர்
சிதறி குவிந்ததில் சிக்குன்டனர் பலரோ !
இடியால் வந்தது இடிபாடுகள் என்றனர்
இருப்பவர் என்னவோ மதியிலா மாந்தரோ !

குறையுள்ள கட்டடம் கட்டியதும் ஏனோ
தரமிலா பொருட்கள் காரணம் ஒன்றோ !
பொறியாளரின் பொறியில் படவிலையா
குறையை அறியாத விளைவின் விபத்தா !

அத்துமீறல் அளவிலா அள்ளிட ஆசையா
கத்துகுட்டிகளா கட்டுமான தொழிலிலும் !
முடிந்திட்ட வாழ்வும் திரும்புமா மீண்டும்
விடியலும் வருமா இழந்த குடும்பத்திற்கு !

பேராசை வேண்டாம் பெரும்பணம் ஈட்டிட
நிராசை ஆனதே நிம்மதியும் போனதே !
உயரம்தான் எதற்கு உரியோர் சிந்திப்பீர்
பகுத்து அறிந்திடுவீர் வழிமுறை வகுப்பீர் !

உழைத்தவன் உயிரும் பறிபோனது இங்கே
பிழைப்பவன் இழைத்திட்ட தவறுகளால் !
களையெடுங்கள் கவன குறைவுகளை
உதவிடுங்கள் உயிர்இழந்த குடும்பத்திற்கு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Jun-14, 8:57 am)
பார்வை : 165

மேலே