பௌத்தம் ஒரு போராட்டம்

உழவன் இல்லாத வயல்
உழுதென்ன பயன்
உண்மையில்லாத நாட்டிலே
உரத்த குரலோன் நாட்டாமை

ஆயிரமாயிரம் உயிர்கொன்று
ஆண்ட நாட்டை கைவிட்டு
இன்பமதை போதிமரத்தினிலே
இரையாக்கிய புத்தர்

நல்வழியில் நன்மைபயக்க
நாற்றிய விதை சில


பற்றினை விட்டு பழகிடு
துயர் விலகிடும்
ஆசையை மறந்திடு
துறவறம் கைவரும்
நற்காட்சி பார்த்திடு
நல்லெண்ணம் தோற்றிடும்
நன்மொழி பேசிட்டு
நற்செய்கைமுயற்சி செய்திட்டு
உன் நல்ல தியானத்தால்
நல்வாழ்க்கை கிடைத்திடும்

போதனையில் உதித்த
பௌத்த மார்க்கம்
பரவிய நாடெங்கும்
தூதுவராய் பிக்குகள்

கிடைத்திட்ட
போதனை மொழிகளிலே
புறப்பட்ட பிக்குகள்
போதனையை கைவிட்டு
பேருவளை நகரினிலே
போராளியாய் சிலபேர்
போராடும் காலமிது
ஆசையை துறந்தபின்
அரசியல் பிரவேசம்
அமைதிக்கு வழி கொடுக்க
ஆணவம் விடுகுதில்லை

பௌத்தநாடென
பெருமிதம் கொள்ளும்
பெருசாளிகள் கூட
பௌத்த சிந்தனையை
பதுக்கி வைப்பதேன்

சினம் கொண்டு எழுந்த
புலிகள் வானிலே சீறிய காலமதில்
சிந்தனையில் மதம்கொண்டு இருந்த
ஓநாய் கூட்டம் சிரம் ஒன்று
சிதறியபின்னே உளையிடுகுது
பௌத்தகூட்டம் என்று
அடக்கிய தமிழ் சமுகம்
அமைதியை தேடையிலே
அடக்கி ஆழ பார்க்குது
இஸ்லாமிய தோழனை

வலிமையில்லாத தலைவன்
வழிவிட்டு நின்றுவிட்டு
வருந்துவதுபோல் நடிப்பது
வேறெங்கே இங்கேதான்
நீர் பௌத்தனாய் இருபதனால்லா

எழுதியவர் : அருண் (1-Jul-14, 8:10 pm)
பார்வை : 91

மேலே