புல் பேச்சு பூச்சண்டை

கடற்பரப்பில் நீ
நடக்கும் பொழுதெல்லாம்
அலைவேகம்
குறைக்கிறது ... நீரடி
மணற்துகள்....
சூரியச் சூடு உணர்ந்திரா
அவைகளுக்கு
தேவையாய் இருந்திருக்கக்கூடும்
உன்
பாதடிச் சுகம்......!!!


தனிமைகளின் பலம்
சொல்லி
கூட நடக்கிறது
நிலா.....
கூட்டங்களின் பலவீனம்
சொல்லி
கொட்டித் தீர்ந்திருக்கிறது
மழை.......!!!


குழந்தையள்ளிக் கொஞ்சும்
திருநங்கை
போலிருந்தது
மலர்கள் பிரசவிக்க
கொடுத்து வைத்திருக்கா
அம்மரம்.....!!!
நீ அமர்ந்து
புகைப்படமெடுத்து சிரித்த
தருணங்களில்.....!!!


இன்னும்
உறங்கிக் கொண்டிருக்கிறது..
பால்வண்டிச் சமிஞ்சை..
செய்தித்தாள் மணி
கோலப் பூசணிப்
பூக்களின் காதல்கள்.....
என
மறந்துவிட்டிருந்த
அதிகாலை தெருச் சாலைகள்....!!!

எழுதியவர் : சரவணா (2-Jul-14, 2:27 pm)
பார்வை : 131

மேலே