காதலி வேண்டும்

பாசம் காட்ட ஒரு தாய் வேண்டும்
பண்பை ஊட்ட ஒரு தந்தை வேண்டும்

உண்மையாய் வாழ உறவு வேண்டும்
உழைத்துக்கொடுக்க சக உறவு வேண்டும்

அணைத்துக்கொள்ள ஒரு கை வேண்டும்
அடித்து திருத்த ஒரு கை வேண்டும்

துன்பம் துடைக்க ஒரு தோழ் வேண்டும்
துயரம் தீர்க்க ஒரு தோழ் வேண்டும்

கெஞ்சி கேட்க ஒரு கண் வேண்டும்
கோபம் தீர்க்க ஒரு கண் வேண்டும்
காதல் பேச ஒரு கண் வேண்டும்
காமம் வீச ஒரு கண் வேண்டும்

பிடித்ததை கூற ஒரு வாய் வேண்டும்
பிடிக்காதபோது நெளிக்க ஒரு வாய் வேண்டும்

புன்னகை பூக்க புது உறவு வேண்டும்
புத்தி புகட்ட புது எதிரி வேண்டும்

மொத்தத்தில் எனக்கு ஒரு
காதலி வேண்டும்................

எழுதியவர் : TP Thanesh (2-Jul-14, 5:58 pm)
Tanglish : kathali vENtum
பார்வை : 222

மேலே