விழியில் விழுந்ததால்
விழியா பாக்குறது ....
இதழா பேசுறது ....
அதை பாக்கமுடியல கேட்க முடியல என்னால ....
அதை பாத்த இடத்துல மனம் நின்னுடுச்சு தன்னால ....
என் பேச்சு மூச்சு கூட காணலை ....
(விழியா பாக்குறது ....)
மனசெங்கே போச்சோ
அத தேடுங்கடா
எங்க நின்னு இப்போ கூத்தாடுதோ ....
கண்ணுக்குள்ள நிற்கும்
கண்ண தேடி போச்சோ
அவ போனவழி பாருங்கடா
எப்போதும் என்னோடு இருக்கும் மனம்
இப்போது எனைவிட்டு பறந்தோடுது
அவள் கண்கள் செய்கின்ற மயன்களோ
(விழியா பாக்குறது ....)
மனம் கட்சிதமா அங்க சிக்கிடுச்சு
அத மாத்துறது பெரும்பாடும்மா
உன்ன சும்மா சும்மா - அது
எண்ணி எண்ணி - என்ன
பாக்க சொல்லி கேட்குதம்மா
இனி என்றும் அது என்னை சேராதம்மா
அதன் வீடு உன் கண்களேதானம்மா
இனி என்றும் உன்னோடு தான் என் மனம் ....
(விழியா பாக்குறது ....)