பிசாசு
சரியோ தவறோ,
ஆசைப்பட்ட மனம்,
அடைய நினைக்கும் யோசனையில்,
உச்சமும் எச்சமும்,
உண்மையாய் தன்மையாய்,
உரித்தாக்க உரிமையாக்க,
கத்தியின்றி ரத்தமின்றி,
போராடும் யோசனையின்,
பட்டவர்த்தனமில்லாத முக்காடு,
முதுகுவியர்த்து முழுதும் கசங்கி,
கிடைக்குமா கிடைக்காதா,
என வல்லினமும் மெல்லினமும்,
கடுமையாய் போராடும்,
ஆவேசமும் துவேசமும்,
கலந்துகட்டி அடிக்கும்,
அடங்காத ஆளுமையின்,
கோரத்தாண்டவமே பெயர்கொள்ளும்,
அடக்கமுடியா அடங்கவொனா,
பொறுமை கொல்லும் பெரும் பிசாசு என்று............