மயானம்
பெண் தவம் புரிய
***பிறவி கிடைத்தது
மண் தவம் புரிய
*** பிறவி முடிந்தது
கண்தவம் வளர்த்த
***காட்சிகள் மறைய
கண்ணீர் உறவுகளின்
*** சாட்சிகள் கலைய….
மகா யாத்திரையின்
***மயானம் வந்தது
ம… யா….. ன…..ம்
உடற்சிறை மீண்ட
***உயிர்புறா
உல்லாசமாய் உலாவும்
*** வனம்
வந்து பாருங்கள்
***தெரியும்…
பேய்கள்
***மயானத்தில் இல்லை
மனதில்….!
மயானம்….
***சொர்க்கத்தின் தொட்டில்
ஆசை, நிராசைகளை
*** சாம்பலாக்கும் யாகபூமி
வாழ்க்கை தொடரிசையின்
***மவுன இடைவெளி
கல்லறைக் காவியங்களின்
***பதிப்பகம்
நாட்டிய கடவுளின்
*** நடன அரங்கம்
நடைப் பிணங்களுக்கு மட்டுமே
***புதைக்குழி
மயானம்
***துயரக்கடல்களை
தாண்டியபின் வரும்
***மணி்த்தீவு
இந்த
மணித்தீவில்
ஈர இதயங்கள் புதைவதில்லை
*** புதையலாகும்
வீர வாழ்க்கைகள் மடிவதில்லை
***விதைகளாகும்…! (2013)
('கடவுளின் நிழல்கள்' நூலிலிருந்து)