கண்ணீரில் உயிர் மறிப்பேன் உனக்காக 555
உயிரானவளே...
நீ சொன்னதை
எல்லாம் செய்தேன்...
நீ ஆசைப்பட்டதெல்லாம்
பரிசளித்தேன் உனக்கு...
அன்பாக சொன்னாய்
எல்லாம் செய்தேன் உனக்காக...
என்னை மறந்துவிடு என்று
எளிதாக சொல்லிவிட்டாயடி நீ...
துடிதுடிக்கும் என் இதயம்
உனக்கு புரியவில்லையா கண்ணே...
விழிகளில் கண்ணீராக எட்டி
பார்த்த உன்னை...
இமை மூடி
கதவடைத்தேன்...
கங்கையாக ஓர் நாள்
நீ உருவெடுப்பாய்...
என் இமைகளுக்கு உன்னை
தடுத்து நிறுத்தும் சக்தி இருக்காது...
என் கண்ணீரின் வெள்ளத்தில்
மூழ்கி மறித்துவிடுவேன்...
நான் உன்னை நினைத்தே...
அந்த நிமிடம் என் இதயத்தை
நீ உணர்வாயா...
தெரியவில்லையடி
எனக்கு...
நீ கேட்டு கொடுக்க
தெரிந்த எனக்கு...
நீ கேட்காமலே கொடுக்கிறேன்
என் உயிரை...
உனக்காக.....