என்னுயிர் காத்தவளே

எல்லையிலா மனதில்- மீனம்மா
...எங்குமுன் பிம்பமடி
இல்லையெனி லருகில்- மீனம்மா
...இதயமிங் கேங்குதடி

வில்லை நிகர்த்த விழி- மீனம்மா
...விடுகணை பாயுதடி
முல்லை நிகர்த்த நகை- மீனம்மா
...மின்னலைப் பாய்ச்சுதடி
(எல்லை)

வாலை பருவத்திலே- மீனம்மா
...வல்லியிடை தழுவி
ஆலையிடைக் கரும்பாய்க்- மீனம்மா
...அள்ளிப் பிழிந்ததெலாம்

வேலையிடை யிடையே- மீனம்மா
...வந்து நெருக்குதடி
மாலைப் பொழுதினிலே- மீனம்மா
...மயக்கந் தருகுதடி
(எல்லை)

முன்னைப் பழவினையால்- மீனம்மா
...முற்றுந் துறந்தவன் போல்
உன்னைப் பிரிந்து வந்தே- மீனம்மா
...உறுபொருள் நாடி வந்தேன்

அன்னை போலென்னிடத்தில்- மீனம்மா
...அன்பினைத்தான் குழைத்து
இன்னமு தூட்டி யெந்தன்- மீனம்மா
...இன்னுயிர் காத்தவளே!
(எல்லை)

எழுதியவர் : பாரதிப் பித்தன் (6-Jul-14, 10:06 am)
பார்வை : 66

மேலே