வியாபாரம்

தனங்களை
வாடகைக்கு விடும்
மாதவிகளே!
உங்களை சீதையாக தான்
பார்த்தோம்
பிறகு ஏன்
சதைகளை விற்கும்
கசாப்புக்கடைகாரன்
ஆனீர்கள்

உங்களை சிலையாகதான்
வடித்தோம்
பிறகு எப்படி
சிதைக்கப்பட்டு
போனீர்கள்

உங்களை புள்ளியுள்ள
கோலமாகதான்
நினைத்தோம்
பிறகு எதற்கு
அலங்கோலப்படுவதற்கு
ஆசைப்பட்டீர்கள்

கள்ளிப்பாலுக்கு அங்கே
கலவரம்
நடந்துகொண்டிருக்கிறது
நீங்களோ
முலைப்பாலை எவனுக்கோ
விலைக்கு விற்கிறீர்கள்

தோள்களை காட்டி
தொழில் செய்யும்
கிளியோபாட்ராக்களே!
உங்கள்
கூந்தல்களில் மட்டும்தான்
பூக்கள் வாடுவதேயில்லை

உங்கள்
காலண்டரில் தான்
தேதிகள் கிழிக்கபடுவதேயில்லை

உங்கள்
பாலைவனங்களில் தான்
மழையும் பொழிகிறது

சுகங்களை விற்கும்
சுந்தக்களே!
காலஅரசனின் மடியில்
காலமெல்லாம் நீங்கள்
குழந்தையாகவே
வாழ்கிறீர்கள்....

எழுதியவர் : மனோஜ் (8-Jul-14, 12:07 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : vyapaaram
பார்வை : 54

மேலே