உழவர் திருநாள்
(உழைத்த உழவனுக்கும்
களைத்த ஐந்தறிவு தெய்வங்களுக்கும்
சாதி பார்க்கும்
சாயம் போன சமுதாயத்திற்கும்
சமர்ப்பணம் இந்த கவிதை)
உழவர் திருநாள்
வெறும் விடுமுறை நாளல்ல
கழனியில் கால் வைத்தவர்களை
கெளரவப்படுத்தும் திருநாள்
மண்வெட்டி உழவனுக்கு
மகுடம் சூட்டும் பெருநாள்
இது மண்ணை பிளந்து
பார்த்தவனுக்கு நடத்தப்படும்
பாரட்டு விழா
பூமிதாயின் பயிர்கள்
பூப்பெய்தியை குறித்து
கொண்டாடப்படும் ஒரு
மஞ்சள்நீராட்டு விழா
வியர்வை துளியை விற்று
வேலை செய்யும்
உழவா!
காவிரிதாயை எப்பொதும்
கடவுளாய் எண்ணிய உனக்கு
கர்நாடகவும் கைகொடுக்கவில்லை
மத்திய அரசும் உன்னை
மதிக்கவில்லை
அன்னம் தரும்
தெய்வம் நீ
மூத்த குடிமகனென்று
சொல்லிகொல்லும் கர்வம் இங்கே
உனக்கு மட்டுமே உண்டு
காற்றுக்கு பஞ்சமில்லை
காடுகள் இருக்கிறவரை
சோற்றுக்கு பஞ்சமில்லை
நாற்றாங்கால் இருக்கிறவரை
உலகத்தில் எந்த குறையுமில்லை
உழவன் இருக்கிறவரை
அவன் உழுகிறவரை
ஆகாயம்கூட நம்மை
அவமதிக்கிறதே என்று
கவலைக்கொள்ளதே
என்றேனும் ஒருநாள்
உலகமே உன்
காலில் விழும்
காலம் வரும்
அப்பொது சொல்
உழவன் உழைக்கும் வர்க்கமென்று