பூக்காரி
மாலையானதும் வாடி போயிற்றே
உன் பூ முகம்
மாலையாவதற்குள் ...!
பூக்காரியின் குரல்
ஊரெல்லாம் மணக்கிறது
கருமேகமானதே
தன் முகம் மட்டும்...!
எத்தனை மலர்கள்
எத்தனை நிறங்கள்
வாடிப் போயிற்றே என் முகம்
விற்பதற்குள் ....!
மண விழா
காணும் பூவே
உன் வாசல் தேடித் தானே
என் வாசப் பூ வாசமே ..!