விலகினால் வலிக்குமென்று சொல்லவில்லையடி 555
உயிரானவளே...
என் உடலும் உயிரும் நீயான
நினைத்து வாழும் என்னிடத்தில்...
கண்ணீரோடு
கையேந்துகிறாய்...
உன் காதலை மட்டும்
விட்டுகொடு எனக்காக என்று...
உன் விழியோரம்
வடிந்த கண்ணீரை...
என் காதல் கரங்கள்தான்
துடைத்தது...
என் விழி நீரை துடைத்துவிட
ஏங்குகிறாய்...
ஒவ்வொரு வினாடியும்...
உன் நினைவு பூக்கள்
என்னை சுற்றியே வலம்வருதடி...
என் வாழ்க்கை சக்கரம்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
மணமகளாய் உன்னை பார்க்கும்
சக்தி எனக்கு இல்லை...
உன்னிடமிருந்து என் நினைவுகளை
திசை திருப்பினேன்...
எட்டு திசை
எங்கும் நீதானடி...
பழக பழக பாலும் புளிக்கும்
என்றார்கள்...
விலகினால் வலிக்குமென்று
சொல்லவில்லையடி...
தித்திகிறாயடி
இன்றும் என்னில்...
களங்கமில்லா
கள்ள சிரிப்புடன்.....