தனிமை
பிறகும் முன் தனிமை தெரியவில்லை
என் தாயின் கருவில் இருக்க !!!
பிறந்த பின் தனிமை தொடர்ந்தது
என்னை சுற்றி ஏதும் இல்லாததால் !!!
குழந்தை பருவம் எதுவும் தெரியாமல்
தனிமை தொடர்ந்தது எல்லோரும்
என் அருகில் இருக்க !!!
இளமை பருவம் எல்லாம் தெரிந்தும்
தனிமை தொடர்ந்தது யாரும்
என் அருகில் இல்லாமல் !!!
காலங்கள் கடந்தன இப்பொழுதும்
தனிமை தொடர்கிறது நினைவுகளுடன்
என் கல்லறையில் கூட !!!