தவளைகள்

வானுயர் பனைமரங்கள் வான்மதி வழி மறித்திட
துணுக்குற்ற பிறை நுதலும் பனங்கனிகள் அறிந்திட
அந்நுங்கு நுதம்பு நுகர்ந்த புனல் நுணலங்கள் பிதற்றி
தடுமாரி பாம்பின் வாய் தானே நுழைந்து நெரிந்தனவே .

==============================================================
Note : நுணலும் தன வாயால் கெடும் --- தெரிந்த பழமொழி. தவளைகள் என் கத்துகின்றன என்பதற்கு ஒரு கற்பனை. அரிவாள் போன்ற பிறை சந்திரன் அறிந்து தள்ளிய நுங்கு கள் (நுதம்பு) குடித்ததனால் குளத்து தவளைகள் பிதற்றி தடுமாரி பாம்பின் வாயில் அகப்பட்டு விடுகின்றன.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (11-Jul-14, 11:06 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : thavalaikal
பார்வை : 72

மேலே