ஒரு ஊமைக்குழந்தையின் கதறல் - சௌந்தர்

உன் கைகளுடன்
கோர்த்துக் கிடந்த நிமிடங்கள்....

உன் இதழ் பட்டு
இளகிப்போன என் இதயம்....

உன் ஸ்பரிசம் பட்டு
பழகிய என் நாட்கள்....

உன் காலடியில்
தலை சாய்ந்த தருணங்கள்...

உன் வாசணை
முகர்ந்த இந்த மூச்சு....

உன்னை அணைத்து
எனதென்று நினைத்த நொடிகள்...

இவைகள்...
இவைகள் தான்
இன்று
என் அடையாளம் ஆகிப்போனது....

நீ பூக்கள் வைத்த என்
நெஞ்சின் மீது....
அதன் தழும்புகள் தான்
மிஞ்சியுள்ளன ....

உன் இதழ் தந்த
முத்தங்களின்
சத்தங்கள் மறைந்து விட்டன!!!
அதன் தடயங்கள் கூட
மறையத்துவங்கி விட்டன....

உன் நினைவு மட்டும்
மறையவில்லையடி...

அது மறுபடியும்
மறுபடியும்
மலர்ந்துகொண்டே இருக்கிறது...

நீ கொடுத்துச் சென்ற தழும்புகளை
தடவித் தடவி பார்க்கிறேன்....

உன்னை....
உன் கூந்தலை...
உன் பாதங்களை...
வருடிய என் விரல்கள்
இன்று ....
..........................................!!!



ஊமைக் குழந்தைக்கு
என்ன வார்த்தை சொந்தங்கள் இருக்க முடியும்???

நான்...
வெறும்
அழுகை மட்டுமே சொந்தமாகிவிட்ட குழந்தை
ஒரு ஊமைக்குழந்தை... - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (12-Jul-14, 9:52 pm)
சேர்த்தது : சௌந்தர்
பார்வை : 61

மேலே