வானமே குடை
வானம் பொழியும்
மழைக்கு -குடை
பிடிக்கதான் எங்கள்
கூரை !
அதிலும் அங்கங்கே
வறுமையின் கிழிசல் !
என்றாவது ஒருநாள்
இறைவன் கூரையை
பிய்த்துகொண்டு கொடுக்கும்
என்று கிழிசலை
அடைக்காத ஏழை !
கடவுளும் கொடுக்க காணோம் !
ஏழையும் அடைக்கக்
காணோம் !