அன்பு கலந்த விருப்பம்

ஒரு பார்வையில்
என்னை இசைத்தாய்...!
ஒரு வார்த்தையில்
என்னை அசைத்தாய்...!
ஒரு புன்னகையில்
என்னை மிரட்டினாய்...!
முதலும் முற்றிலுமாய்
என்னுள் வசித்தாய்
என்னை ஆட்டு வித்தாய்...!
காண்பதில் எல்லாம் நீ
கேட்பதில் எல்லாம் உன் குரல்
போகும் வழி எங்கும் உன் கால்தடம்...!
கார்மேகம் சூழ
மழை பொழிந்தது
உன் நினைவுகள் சூழ
காதல் மலர்ந்தது...!
ஓர் இரவில்
தனிமையாய் ஒரு நிலவு
தனிமையிலும் இனிமை
உன் நினைவு
கள்வனே
உன்னுள் ஏன்
இத்தனை குறும்பு..!
உன் சில்மிஷங்களை
விரும்பி -விருப்பம்
இல்லாமல் காட்டி
ஏற்று கொண்டேன்...!
நம் ஆழ் மனதில்
சின்ன சின்ன ஆசைகள்
பகிர்ந்து கொள்ள விருப்பமே
ஆயினும் வெட்கத்தில்
அதை மறைத்தோம்..!
பகிரும் நாள் வரும்
அந்த நாளை நோக்கியே
நம் பயணம் (திருமணம்) ..!