காதல் பூந் தோட்டக்காரன்

மலரை நான் ரசித்த போது

கவிதைகள்

உள்ளே அழகில் மலர்ந்தது !



மழையை நான் ரசித்த போது

கவிதைகள்

நெஞ்சில் நீரோடையானது !



நிலவை நான் ரசித்த் போது

கவிதைகள்

என்னில் நிறங்களில் விரிந்தது !



உன்னை நான் ரசித்த போது

கவிதைகள்

நெஞ்சில் வண்ணப் பூந்தோட்டமானது !



உன்னை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன்

கவிதா மலரே

நான் இந்தக் காதல் பூந்தோட்டக்காரன் !



~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Jul-14, 10:30 am)
பார்வை : 96

மேலே