றமழானும் நானும்
விருந்ததை மறந்தேன்
பணிந்தேன்
உனை நினைந்தேன்
றமழானில் சிறந்தேன்!!
பசியதை உணர்ந்தேன்
நெகிழ்ந்தேன்
அவருக்காய் கொடுத்தேன்
நோன்பதை உணர்ந்தேன்!!
ஆசை பல துறந்தேன்
அறிந்தேன்
அதன் பலன் உணர்ந்தேன்
முழு மதி ஆனேன்!!
பொறுமையை கற்றேன்
பூரணமானேன்
இறை அவன் உணர்ந்தேன்
அவன் அடி பணிந்தேன்!!
கொடை பல செய்தேன்
நன்மையில் உயர்ந்தேன்
மனமது மகிழ்ந்தேன்
பலன் பல பெற்றேன்!!
.................................................................
நன்மைகள் பலது
சொல்வதில் உயர்வு
நோன்பாளி நான்
என்பதே பெரிது!!
நோய் நிவாரணி நோன்பு
இறை மகிழ்விக்கும் மாண்பு
புரிந்தவர் வாழ்வு
சிறந்திடும் ஈருலகு!!
ஐம்புலன் அடக்கி
ஐவேளை தொழுது
அவன் அடி பணிந்தால்
அவணியில் சிறப்பாய்!!
அன்புடன் ஜவ்ஹர்!!