காதல் சொன்ன பாடம்

காதல் பொழுதுகள்!
காற்றில்
கதிரியக்க வேளைகள்...
பூமியின் அழகுகள்
செழிக்கும்
வசந்தத்தின் வருகைகள்.

புறஊதா
அகச்சிவப்பு
பலவண்ண கலவைகள்...
மிதவாத
மாந்தருக்கு
தீவிர துடிப்புகள்.

பேரானந்த பகல்கள்
ஏகாந்த இரவுகள்
எண்ணமெல்லாம் அவள்தான்...
அவளுக்கு அவன்தான்.

பேரானந்த ஒலியில்
ஏகாந்த அமைதியில்
நமக்கென்று வாழ்பவர்
நம்மைச்சுற்றி வாழ்பவர்...
எல்லாம் மறக்கிறோம்.

பெற்றவர்,கூடவே பிறந்தவர்
உற்றவர்,உயிர்த்தோழர்
யாவரையும் துறக்கிறோம்.

இத்தனையும் போனது
நமக்கு
இரண்டாம் பட்சமாய்,
மொத்தமும் ஆயினர்
நமக்கு
மூன்றாம் மனிதராய்.

கல்விகள் ஒதுக்கி சில காதல்,
நன்றிகள் மறந்து சில காதல்,
பணிகள் துறந்து சில காதல்,
பாசங்கள் உதறி சில் காதல்,

ஆகையினால் அறிவிக்கிறேன்!
அருமை காதலர்களே!!
நீங்கள்
ஜெயித்த பின்னோ
தோற்ற பின்னோ...
இங்கேதான் வாழ வேண்டும்.

எனவே முதலில்
மனிதர்களை போற்றுங்கள்.
கடமைகளை ஆற்றுங்கள்.
கூடவே
காதல்கோடி ஏற்றுங்கள்.

எழுதியவர் : RamVasanth (16-Jul-14, 4:44 pm)
சேர்த்தது : ராம் மூர்த்தி
பார்வை : 88

மேலே