பாண்டிய நாடு

புலவர் பாக்களில் பவனி வரும் பைந்தமிழும்
புவியாளும் பாண்டியன் தவப் பைங்கிளியும்
பரமனையும் பற்றிவிட , பிரம்படியும் பொறுப்பான்
புளகாங்கிதத்தில் பதம் மாற்றி பரதமிடுவான்
பொருட்குறை புலவர் பாட்டிற்க்கு பொன் பரிசளிப்பான்
பாண்டிய நாடு காக்க , பட்டர் மானம் காக்க
தென்பாண்டி நாட்டானாய் பாமரனாய் பண் பாடினான்
செந்தமிழ் பாட்டுடைத்து எங்கள் பாண்டிய நாடு .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (16-Jul-14, 10:59 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 417

மேலே