விவிவி கவிதை

விழித்த போதும்
வீழாத சுகம்
விழிகள் வேண்டுவது
விழிக்கையில் உன் முகம்

விண்ணில் பறப்பேன் நீ என்
விரலை பிடிக்க
விஷமும் குடிப்பேன் நம்
விவாகம் நடக்க..........!

வீணை போல் இசைக்கிறாய்
வீணாய் இளைக்கிறேன்
வீரு கொண்டால்
விம்மி அழுவாயோ என
விவேகமாய் இருக்கிறேன் நீயோ
விஷமமாய் சிரிக்கிறாய்.........!

விஷயம் சிறிதுதான் உன்
விழிகளை பார்த்துவிட்டால் அதை
விவாதிப்பது எனக்கு அரிதுதான்.....!

விலை இல்லா அழகே சொல்லாது
விடியாது என் உலகே அதை
விட்டு விட்டாலோ வேகாது என்
விறகே..............!

வருமோ ஒரு தருணம் இறைவா
வரமாய் அதை தரணும்
வலியோ அது சுகமோ
வரும் அந்நாளோடு சொல்லி
விடணும்..............!

விடலை காதல் அல்ல இது என்னை
விடாத காதல் என்று
விடுகதை போட்ட மனம்
விடையை சொன்னதடி.........!

வந்து சொல்கையில்
வம்பாய் பேசாதே
வீம்பாய் போகாதே
வீணாய் போனவனே என
விரட்டும்படி சொல்லை
வீசாதே என் காதலுக்கு
விளைச்சல் கொடு உளைச்சல்
வேண்டாம் பெண்னே.........!

எழுதியவர் : கவியரசன் (24-Jul-14, 9:10 pm)
பார்வை : 102

மேலே