அவன்அவள்
அவன்: நீ விழி மூடி யோசிக்கும் கனவுகள் நான்
அவள்: என் நெஞ்சோடு சுவாசிக்கும் நினைவுகள் நீ
அவன்: என் இமைகளின் இடையினில் கருவிழி நீ
அவள்: உன் விழிகளை காக்கும் இமைமுடி நான்
அவன்: உன் பெயரே உச்சரிக்கும் கிழிபிள்ளை நான்
அவள்: என் உயிர்கூட்டில் கூவிடும் ஓர் கிழி நீ
அவன்: எட்டாத தூரத்தின் வெண்ணிலா நீ
அவள்: உன்னை எப்போதும் தொடுகின்ற நிழவொளி நான்
அவன்: பெரும் எழுத்தாளர்கள் எழுதிய பாடல்கள் நீ
அவள்: அதை மெட்டு எடுத்து பாடிய பாடகன் நீ
அவன்: தூங்காத நேரத்தில் ஏக்கங்கள் நீ
அவள்::உன்னை தூங்காமல் வைத்திடும் கனவுகள் நான்
அவன்: இவ்வுலகத்தின் அழகான கவிதை நீ
அவள்: அதை உருவாக்கி கொடுத்த கவிஞன் நீ
அவன்: யாவரிலும் அழகான காதலி நீ
அவள்: யாவரும் கண்டறியாத காதலன் நீ