அன்னையின் வளர்ப்பில்

பொய் சொன்னால் பொரியும் கிடையாது என்பர்
பொய்க்கு மேல் பொய் பேசுபவர்களை யாரும் நம்பமாட்டார்கள்
அவன் சொல்லும் பொய் அவனுக்கே வினையாகிவிடும்
சிலர் வாய் திறந்தாலே பொய்தான்
சில சமயங்களில் அவன் உண்மையை
அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாது
சிறு வயதில் இருந்தே பொய் சொல்லும் பழக்கம்
வந்துவிட்டால் மாற்றவோ திருத்தவோ முடியாது
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
அவன் தனிமை படுத்தப் படுவான்
மக்களுடன் இணைந்து வாழ
மக்கள் அவனை நம்ப வேண்டுமே
இதனால் அவன் மனம் விரக்தி அடைகிறான்
இந்நிலை வர பெற்றோர்களே காரணம் ஆகி விடுகிறார்கள்
ஏனெனில் சிறு வயதில் செய்யும் சிற்சில
பிழைகளை உடனுக்குடன் திருத்திட வேண்டும்
செல்லம் செல்லம் என்று பொருட்படுத்தாது விட்டால்
விளைவு உங்களையே சாரும்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே

எழுதியவர் : பாத்திமா மலர் (24-Jul-14, 10:29 pm)
பார்வை : 73

மேலே