மரங்கள் சிரித்த நிமிடங்கள்

அப்பாவிற்கு அறுபது வயது
தீடீரென்று இருதயத்தில் கோளாறு
இரண்டு லகரம் தேவை என்று மருத்துவர்கள் கூற
மயங்கி விழும் நிலையில் அன்னை
செய்வதறியாமல் திகைத்த எனக்கு
உதவி செய்தது உறவுகள்

எனக்கு இருபத்தி நான்கு
இந்த ஆகஸ்டுடன் நிறைவு
அப்பா இன்று நலம்
ஆனால் ஆட்டம்,பாட்டம் என்று திரிந்த என்னை
முற்றிலும் மாற்றிவிட்டது
அந்த மருத்துவமனையில் என்னை பார்த்து
மரங்கள் சிரித்த நிமிடங்கள் ...

எழுதியவர் : senthuzhan (25-Jul-14, 6:47 pm)
பார்வை : 60

மேலே