வேண்டுகிறேன் இறைவா
இறைவா.................!
படைப்பு அனைத்திலும் நீ இருப்பாய்
பார்க்கும் இடதில் எல்லாம் நிறைந்திருகின்றாய்
படைத்த காரணத்தை நீ அறிவாய் -பரம் பொருளே
பாவப் பட்ட என்னை ஏன் படைத்தாய் ...?
களிமண்ணாய் இருந்திட்ட என்னை
கவின் மிகு பாதிரமாக்கினாய் - ஒரு
கரு கொண்டு உரு கொடுத்து -அழகு
கற்பனையில் உருவாக்கினாய்
மாயக் குயவன் செய்த வெறும்
மண் பொம்மை அல்லவா - இந்த
மனித பாத்திரத்தில் நீர் ஊற்றிப் பார்க்க
மண் பண்டம் நான் என்ன தவம் செய்தேன்
ஆடினேன் ..! பாடினேன் ..!ஆனந்தம்
அனைத்தையும் அனுபவித்தேன்
அனுபவித்த ஆனந்தத்தை அனைவருக்கும்
அள்ளித்தர ஆண்டவனே மனம் ஓன்று
தர அல்லாவின் அருளால் இன்று வேண்டுகிறேன் !