மன்னிப்பாயா

வலிகள் கொடுப்பதிலே
காதல் முதலிடமே
என்றே நான் இருந்தேன்
நட்பே உனை பிரிகையில்
காதல் கால்தூசு
நட்பு உயிர் மூச்சு என
புரிந்தது என் உயிர் நண்பா

கூடவே ஒட்டி இருந்தாய்
விரலிலே நகம் போல்
தோழா
வெட்டி நான் வீழ்த்த
பார்த்தேன்
இரத்தமாய் கொட்டுதடா

பணமின்றி வாடும்
போதும்
குணம் கெட்டு போகும்
போதும்
உடனிருந்து நல்வழி
காட்டி
வரஇருந்த பழியை
போக்கி
என் சிரிப்பை கண்டே
மகிழ்ந்தாய்
உன்னை பிரிய முடியுமோ
நண்பா

சூரியன் ஒன்றே ஒன்று
என் நட்பிற்கு நீதான் என்று
அழைக்கிறேன் வா என்
நண்பா
கோபங்கள் தீரும் நண்பா

நிலவு அவள் காதல் தானே
இருளினில் ஒளி தரும்
என்றேன்
சூரியன் நீ இல்லை என்றால்
நிலவிற்கே ஒளி இல்லை
உணர்ந்தேன்

வெளிச்சங்கள் நீ தந்த
போதும்
கவர்ச்சியின் பின்னே சென்று
உணர்ச்சியின் வலையில்
விழுந்தேன்

தோள் கொடுத்து தூக்கும்
உன்னை தாக்கும்படி
சொற்களை வீசி
நோகடித்தேன் மன்னியும் தோழா
மனதில் அதை நீக்கிடு தோழா

இருவரும் ஒன்றாய் இருப்போம்
விண்வெளியில் நன்றாய் ஜொலிப்போம்
பழையன மறந்திடு தோழா
கழியட்டும் சோகமும் தான்டா

எழுதியவர் : கவியரசன் (2-Aug-14, 12:12 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 232

மேலே