கொண்டாட்டம்

கொட்டும் மழையில்
தொப்பலாக நனைவது
சிலருக்கு மிகவும் பிடித்தது

குடை பிடித்தும் நடனம் ஆடியும்
காதலர்கள் நனைவது ரொம்ப சுவாரசியம்
பள்ளி பிள்ளைகள் மழையில் நனைந்து
விளையாடி வருவது
நண்பர்கள் அரட்டை அடித்து
உருண்டு பிரண்டு மழையில் நனைவது
வீட்டுக்கு வந்தவுடன் அடி வாங்குவது
ரொம்ப ரொம்ப சுவாரசியம்

அதை விட மழை காலம் என்றால் அடிக்கடி
பள்ளிகள் விடுமுறை விடுவது
மாணவர்களின் மிகப் பெரிய கொண்டாட்டம்
எல்லோருக்கும் மழைகாலம் தொடங்கி விட்டால்
குதூகலமும் கொண்டாட்டமும் தான்

இதுமட்டுமா மழை வந்து விட்டால்
விவசாயிகள் படு சந்தோசம்
குடிநீருக்காக அலையும் மக்கள் முகமெல்லாம்
ஆனந்தம் பொங்கி வழியும்
மழையினால் எவ்வளவு மகிழ்ச்சி
எத்துனை ஆட்டம் பாட்டம் சந்தோசம்

மழைக்காக ஏங்கி ஏங்கி
ஏமாற்றம்அடைந்த மக்கள்
மழை வந்தவுடன் அளவற்ற மகிழ்ச்சி
மட்டற்ற மன திருப்தி அடைகிறார்கள்
மழை இல்லையெனில் விவசாயம் இல்லை
தண்ணீர் இல்லை குடிநீர் இல்லை
உயிரினங்கள் வாழமுடியாது
இவையாவும் இல்லை என்றால்
மனிதனே இல்லை எனலாம்

இத்தனைக்கும் காரணம் மழை மட்டுமே
மரங்களை காடுகளை பசுமைகளை பாதுகாப்போம்
மழையை வரவேற்போம்
ஆனந்தமாய் கூடி மகிழ்ந்திடுவோம்

எழுதியவர் : பாத்திமா மலர் (9-Aug-14, 2:50 pm)
Tanglish : kondaattam
பார்வை : 229

மேலே