பெரிய குடும்பங்க நாங்க

அடுக்கு மாடி வீடுகட்டி,
ஆசைதீர விளக்கு எரியும்,
பளிங்கு மாட மாளிகைக்கு,
பல்லக்கில் போன பெண்ணே உன்
ஆம்புடையான் வீட்டை பத்தி
ஆசையாய் கொஞ்சம் சொல்லிடு
புள்ள.....
சொடக்கு போடும் நேரத்துல,
சொக்கிப் போன என் அழகுல.
சுத்தி சுத்தி வந்து எனக்கு
தாலியையும் கட்டிபுட்டார்
- என் மாமன்
தாலியையும் கட்டிபுட்டார்.....
மடக்கிப் போடும் கட்டிலிலே,
மாமனார் ஆட்டுவிக்க,
அடுப்பெரிக்க ஓடிப் போகும்,
அருமை அத்தை தானும் இங்கே. ...
நடக்க நடக்க போகுதடி,
நாலுமாடி வீடு இங்கே
செவ்வாழை கண்ணெல்லாம்
சிரிக்குதடி என் வீட்டில்
நேற்றிருந்த குடிசைவாழ்க்கை
இன்று மாறி போனதடி...
மச்சினரு இரண்டு பேரு
கொழுந்தனார் ஒத்த ஆளு
குடும்பம் ரொம்பம் பெரிசுதானடி
குதூகலமாக இங்கு வாழுறேனடி...
முதன்முறையாக பேச்சுவழக்கில் சிறு முயற்சி. ..தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நிஷா