நம் நாடு

இறந்தால்தான் சொர்க்கத்திற்கு
செல்வோம்....
ஆனால் நாம் பிறந்ததே
சொர்க்கத்தில்தான்....

அன்று,
வியர்வைக்கு பதில் இரத்தம்
சிந்தி பெற்ற சுதந்திரம் இது....
இன்று,
பெண்கள் சுதந்திரமாக
நடக்கமுடிவதில்லை.....

காட்டில் மிருகங்களின்
வேட்டையை விட
ரோட்டில் மனிதமிருகங்களின்
வேட்டை
கொடுமையாக உள்ளது....

நாம் காண்பது கனவா நனவா..?
பட்டங்கள் காற்றில்
பறப்பதில்லை...
சட்டங்கள்தான் காற்றில்
பறக்கின்றன
நமது தாய்த்திருநாட்டில்...

திருவிழாக் கூட்டமும்
தோற்றுப்போகும்
விவாகரத்து பெற
நிற்பவர்களிடம்....

கருத்துகளை பரிமாறுகிறேன்
தகவலை தேடுகிறேன்
என்ற பெயரில்,
இதயத்தை தொலைக்கிறான்
இணையதளத்தில்....

வெளிநாட்டவர் சுரண்டிச்சென்றது
செல்வங்களை மட்டுமல்ல....
திறமையான இளைய
செல்வங்களையும்தான்...

பல ஏழைகள் பொருளாதார
நெருக்கடியின் பிடியில்....
பல அரசியல்தலைகள்
குடி போதையில்....
விலைவாசி உயர்வு காரணமா...?

பாரததாயின் ரத்தநாளங்கள்
துண்டுபட்டு கிடக்கின்றனவே
ஆறுகளாக....

கண்ணுக்குள் கனவுகள்
இருக்கின்றன...
இமைதிறக்கும் போது
அவை மறைந்துவிடும்...
அதுபோல நாம் காண்பது
கனவாக இருக்காதா..?

புத்துணர்ச்சி கொண்டு
மறுமலர்ச்சி வேண்டுமாயின்
சத்தமில்லாமல்
ஒரு யுத்தம் வேண்டும்
நமக்குள்...

எழுதியவர் : கவிராம் (15-Aug-14, 7:25 pm)
Tanglish : nam naadu
பார்வை : 1526

மேலே