இறந்தும் இறவாத நான்

இரவு நேரம் - வழமை போல்
என் கால்கள் கடற்கரையில்
நாட்டியம் பயில்கிறது
என் ஆசிரியன் நிலா
என் இசை கடல் இரைச்சல்
என் வியர்வை பொங்கும் நுரை
ஆடி ஆடி களைத்த என் கால்கள்
ஓய்வுக்காய் கெஞ்சுகிறது
நானும் அப்படியே கீழே
விழுந்து கடல் மண்ணை
அணைத்துக் கொள்கிறேன்
தலை உயர்த்தி விரிந்த
கடலை பார்க்கிறேன்
அது தன இசையை நிறுத்தி
விட்டது
என் ஆசிரியனும் உனக்கு
இன்று போதும் என்பது போல்
பரந்த மேகத்தை தன ஓய்வுக்காய்
அழைத்து விட்டது
நான் கால் மேல் முகம்
புதைத்து அமர்ந்தேன்
விடிகாலை வருகிறது நீ
போகும் நேரம் இது
காற்று என் காதில் வந்து
ஓலமிட்டது
மெல்ல எழுந்தேன்
நாளைய இரவை எதிர்ப்பார்த்து
கல்லறை நோக்கி நடந்தேன்

எழுதியவர் : fasrina (15-Aug-14, 7:51 pm)
பார்வை : 123

மேலே