போக்குவரத்து விதி மீறல் தமிழகத்திலும், பிரிட்டனிலும் ஓர் ஒப்பீடு - 3

சூழல் 9:

லண்டனில் உள்ள பஸ்கள் ஒருதளம், இருதளம் உடையன.
(மேல் தளத்தில் 41 பேர், கீழ்த் தளத்தில் 22 பேர், நிற்றல் 23 பேர்)
பஸ்கள் சிவப்பு நிறத்துடன் பளபளப்புடன் இருக்கின்றன.
நடத்துனர் என்று யாரும் கிடையாது.

ஓட்டுனரின் அருகில் இன்ஜினை ஒட்டியுள்ள கருவியின் (Card Reader)
மீது பண அட்டையை (Oyster card - முன்பே பணம் செலுத்திப் பெறப்பட்ட
அட்டை) வைத்தால் டிக்கட்டுக்கான பணத்தை பெற்றுக் கொள்ளும்.

அந்த பஸ் செல்லும் வழியில் எந்த நிறுத்தத்திலும் இறங்கலாம்.
டிக்கட் கட்டணம் 1.5 பவுண்டு மட்டுமே (சுமார் 150 ரூபாய் மட்டுமே).
பெரும்பாலும் பஸ்களில் கூட்டமிருக்காது. யாரும் நின்று செல்வதையும்
பார்க்க முடியாது.

பெரும்பாலான பயணங்கள் கார்கள், ரயில், பேருந்துகளில் மட்டுமே.
ஒரு சில மொபட்களும் (Pizza delivering boys), மோட்டார் சைக்கிள்களும்
பார்க்கலாம். ஆட்டோக்களே கிடையாது, அடாவடியும் கிடையாது,
பெருத்த நிம்மதி.

சூழல் 10:

லண்டனில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தத்தை
அடுத்த பகுதியிலும் சிலதூரம் வேறு வாகனங்கள் செல்லக்கூடாது.
BUS STOP, BUS LANE என்று தரையிலேயே குறிப்பிட்டிருக்கும்.

Every lane has unique hours of operation which can easily lead to drivers
being confused and ending up with a £130 fine.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் இரவு ஒன்பது
மணியிருக்கும். என் மகன் ஒரு ரோடு திருப்பத்திலிருந்த BUS LANE
ஐக் கவனிக்காமல் காரில் சென்று விட்டார். அது CCTV Camera வில்
பதிவாகி 60 பவுண்டு (6000 ரூபாய்) அபராதம் விதித்து நோட்டிஸ் வந்தது.

அதற்கு ஆதாரமாக வீடியோவும் மின்னஞ்சலில் வந்தது. 21 நாட்களுக்குள்
கட்டினால் 30 பவுண்டு (3000 ரூபாய்) போதுமென்றும் இருந்தது. அபராதம்
30 பவுண்டு கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

(தொடரும்}

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-14, 1:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 172

மேலே