ஜனநாயக உரிமை கடமைகள்

ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள் மற்றவர்கள் எல்லாம் நாம் நம்மால் நிருவகிக்கப்பட நமக்கு நாமே உருவாக்கப்பட்டவர்கள் எனும் மக்களாட்சி தத்துவத்தின் சீரிய நர்சிறப்பு வாய்ந்த அரசியலமைப்பு கொள்கையை பெற்றுத்தரவும் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும் வெள்ளையர்களிடம் கடுமையாக போராடி கிடைத்த சுதந்திர தினத்தை கொண்டாடியும், இந்நன்னாளில் சுதந்திரத்திற்கு அயராது பாடுபட்ட தேசத் தலைவர்களை நினைவு கூர்ந்தும் இந்நன்னாளை சிறப்பித்து கொண்டாடுவோம்
தனிப்பட்ட சுதந்திரம்,பேச்சுரிமை,எழுத்து
ரிமை,கருத்துரிமை,தகவல் கோரும் உரிமை,சங்கம் அமைக்க உரிமை,கூட்டம் கூட்ட உரிமை,இந்தியாவின் எப்பகுதிக்கும் குடியேற,சென்று வர,தொழில் தொடங்க உரிமை,சுரண்டல்களை தடுக்க உரிமை,நம்மை நாமே நிருவகிக்க பிரதிநிதித்துவ ஓட்டுரிமை,என பல்வேறு உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் வழியாக பெற்றுத்தர காரணமாக அமைந்த இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி நாட்டை வல்லரசாக்க உறுதி பூணுவோம்.
கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை என்பதை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்து அரசியலமைப்பை மதித்து நாட்டையும்,நாட்டுபற்றையும் வளர்த்து,நாட்டு நலப்பணி செய்வது,சுற்று சூழலை பாதுகாப்பது,பொதுகருத்தை கொண்டு சென்று குடிமக்களிடையே குடியுரிமையின் மதிப்பினையும்,நெறிமுறைகளையும் பேணிக்காத்து நாட்டை அமைதியுடனும்,வளமுடனும்,வளர்ச்சியுடனும் கொண்டு செல்ல சபதம் ஏற்ப்போம்
நாள் 15/08/2014 சிட்லபாக்கம் வீ.ஆர் .சதிஷ்குமரன்

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன (17-Aug-14, 8:01 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 275

மேலே