காகிதப்பூக்கள்

காகிதப் பூக்களுக்கும் மனமுண்டு !!!
தெருவோரம் விளையாடும் சேரிக்குழந்தைகள்
-காகிதப்பூ எனில்,
காகிதப் பூக்களுக்கும் மனமுண்டு !!!

துடிப்போடும் மன உறுதியோடும் எதிர்நீச்சல் போடும் மாற்றுதிறனாளி
-காகிதப்பூ எனில்,
காகிதப் பூக்களுக்கும் மனமுண்டு !!!

அரசுத்தொட்டிலில் கவி பாடும் தெய்வக்குழந்தைகள்
-காகிதப்பூ எனில்,
காகிதப் பூக்களுக்கும் மனமுண்டு !!!

காகிதப்பூக்களை தூரிகை இட்டால்
-வர்ணமயமாய் அலங்கரிக்கும்
ஆனால் குப்பையிலிட்டால் ????

எழுதியவர் : யோகானந்த் (20-Aug-14, 10:20 am)
சேர்த்தது : யோகானந்த்
பார்வை : 172

மேலே