தனிமை
மெல்ல அசையும்
மேலான வாழ்க்கை கடலில்
நிழல்கள் மட்டுமே
எனக்கு
நுரைகள் மட்டுமே
எனக்கு
நினைவுகள் மட்டுமே
எனக்கு
வாழ்தல் இல்லை
எனக்கு
மரணம் மட்டுமே
எனக்கு
உடைந்த கப்பலில்
இடிந்து போய் விட்டேன்
இனிமேல் நான்
கண்ணீர் இல்லாத
வருத்தம் இல்லாத
வழியே செல்வேனா?
அப்போதும் அமைதியும்
அழியாத இன்பமும்
அணைக்குமா என்னை!