பழிக்கு பழி

பழிக்கு பழி

எங்களை தின்று தீர்க்கும்
மனிதகளை தின்று தீர்க்கவும் முடியவில்லை
வென்று பார்க்கவும் முடியவில்லை

கத்தியால் இல்லையெனினும்
காகிதத்தினாலாவது கிழித்து கொல்கிறோம்
காயங்கள் ஏதுமில்லாமல்

கூர்மையான
எங்கள் பற்கள் ஏற்படுத்துவது இல்லை
குருதி சிந்தும் கீறல்களை
உங்களின் விரல்களை போல ...............

இலைகளை மட்டுமே உண்கிறோம்
உங்களைப்போல் மரத்தையே உண்பதில்லை
மரத்துப்போன இதயத்துடன்

கோரப்பசி என்றாலும்
ஈரமுள்ள இலைகளை இம்சிப்பதில்லை
பூக்களை பறித்து
அதில் முகம் பார்த்து
சிரித்துகொள்ளும்
அரக்க குணம் அணுவளவும் இல்லை
எங்கள் ஐந்தறிவுக்கு எட்டியவரை .






கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (20-Aug-14, 11:39 am)
Tanglish : pazhikku pazhi
பார்வை : 188

மேலே