அன்புள்ள நியந்தாவுக்கு

அன்புள்ள நியந்தாவுக்கு

இது ஒரு நீண்ட கடிதம்...... ஆனால் குட்டிக் குட்டிக் கடிதம். இது அவளுக்கு அவள் பற்றிய கடிதம். அவளாகிப் போன கடிதம். அவளாகவே எழுதப் படுகிறது.

நியந்தா....... !

இப்படி ஒரு பேரா.....!?....... இனி சத்தியம் செய்து சொல்லி விடலாம். தேவதை என்பவள் இப்படித்தான் இருப்பாள்.....என்று.... இப்பொழுதே மொத்த அழகையும் சொல்லி விட்டால்... நான் எழுதுவதை விட்டு படித்துக் கொண்டு தான் இருப்பேன்.... ஆக, மூக்குத்திப் பெண். மேலுதடு கொஞ்சமாக தூக்கி, ஒரு சாயலுக்கு கொரியன் பெண்ணைப் போல தோற்றமளிக்கும் மாநிறக்காரி.....

இப்போதைக்கு இது போதும்.....ம்ம்.. மறந்து விட்டேனே.... இவள் எப்படி எனக்கு அறிமுகம் ஆனால் என்று கூறினால், போடா..... எத்தன தமிழ் சினிமா பாத்திருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள்..... அப்படி சொன்னாலும் அதுவே உண்மை...

ஒரு இலக்கிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். ஒரு பெண், பாதி கூட்டத்தில் ஒரு வேக வேகமாய் ஓடி வந்து எனது பக்கவாட்டில் அமர்ந்தாள். கிட்டத்தட்ட கூட்டத்தில் எல்லாருமே, பேசுபவர் உள்பட ஒரு கணம் சட்டென அவள் பக்கம் திரும்பி, பின், தொடர்ந்தார்கள். நானும். ஆனால் அந்த ஒரு கணத்திலேயே இவள் பேரழகி என்று எனக்குள் ஒரு விதை விழுந்து விட்டது. அனால் இலக்கியமா இவளா என்று யோசிக்கும் அளவுக்கு கூட நான் போக வில்லை.. கவனம் முழுக்க இலக்கியத்தின் மீதே. ஆனால் ஆழ்மனம் அவளை தழுவிக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின், பிராய்டை படிக்கையில் உணர்ந்து கொண்டேன்....

கூட்டம் முடிந்து தெரிந்தவர், தெரியாதவர், என சம்பிரதாய கைகுலுக்கல் முகக் குலுக்கல் கொடுத்துக் கொண்டிருக்கையில், அந்த மாநிரக்காரி என் அருகே வந்து என் கையில் ஒரு காகிதத்தை திணித்து விட்டு வேகமாக சென்று கூட்டத்தில் மறைந்து விட்டாள். முதலில் எதை பார்ப்பது, காகிதத்தையா, அவள் தொட்ட கையையா?..., அவள் சென்ற திசையையா.....? ஒன்றும் புரியாமல், கூட்டம் விட்டு விலகி வெளியே வேகமாய் வந்து காகிதத்தைப் பிரித்து பார்த்தேன்....

"நீங்கள் யார் பெயர் என்ன ?.... ஒன்றும் தெரியாது.... ஆனால், இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து....." என்று எழுதி இருந்தாள்.... கீழே, "இது என் அலைபேசி... " என்று ........90476836..

* மீதி இரண்டு எண்ணும் கொடுத்திருந்தாள்..... (இங்கு நான் எப்படிக் கொடுப்பேன்.....ஹ ஹ ஹா......) பொறுத்திருங்கள்..... நான் இன்னும் ஒரு 50 முறையாவது இந்த கடித்ததைப் படிக்க வேண்டும். பிறகு அடுத்து நடந்ததைப் பற்றிக் கூறுகிறேன்......

கவிஜி.........

எழுதியவர் : கவிஜி (21-Aug-14, 9:55 pm)
பார்வை : 213

மேலே