தண்ணி குடமெடுத்து!
என்று தணியும் இந்த குடிநீர் தாகம்
இப்படி தாண்டும் எம் குல பெண்களின் சோகம்
களவையும் கற்றது கற்புநெறி தமிழ்த்தாயாய்
காண்பவரை வியக்கவே காலத்தின் தண்டனை
தண்டிக்க முடியாத தீர்பிர்க்காய் காண்பதும்
தண்ணீருக்கான நீதியில் வழக்கிருக்கும் உலகமே
தீர்ப்பாயம் திருந்துமா தெரியல முடிவில்லே
தினம் பொழியும் கண்ணீர்மழை குறையுது புதிதில்லே