நானே நீயாகிப் போய்விட்டேன்

உயிரே!
காலங்கள் கடந்து
போய்விட்டது- என்றாலும்
நீ எனை கடந்து
சென்றதாய் சுவடுகளில்லையே!
என்னில் கரைந்தவனே - உன்
உறவு உறைந்து போய்விட்டதே!

நான் அலைந்து திரியும்
சாலை எங்கும் - அன்பே
உன் பெயர் எழுதினேன்,
அவை காலங்களோடு
கோலங்கலாகும் என்றே!
மாறாக இன்று;
அவை என் நெஞ்சோடு
காயங்களாகிவிட்டன!

பொழுதுகள் விடியும்
போதெல்லாம் - உன்
வதனமதை எதிர்பார்த்தே
விழி மலர்ந்தேன்,
என் பொழுதுகள்
வீணாவதென என்றேனும்
எண்ணியதில்லை!

என் உணர்வுகளை எல்லாம்
கவியாக்கியவனே - நீ
மாய வித்தைக்காரனடா ,,,
உன் ஓரவிழிப் பார்வையிலே
நான் வானில் பறக்கிறேன்,
உன் ஒற்றையடிப் புன்னகையிலே
பூவாய் பூக்கிறேன்!

உன் மாயைகளில் சிக்கியே,
நொடி தவறாமல் நான் - இங்கு
மாய்கிறேன்!
எனக்கு எல்லாமே
புரிந்துபோன பின்னரும்
உன்னை விட்டு வர,
முடியவில்லை....
இன்று,
நானே நீயாகிப் போய்விட்டேன்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (23-Aug-14, 7:53 pm)
பார்வை : 91

மேலே