அன்புள்ள பாரதிக்கு

அன்புள்ள பாரதிக்கு உன் பிரிவால் வாடும் தோழி எழுதும் கவிதை அல்ல உன் பிரிவின் காயங்கள்....!

வீர தலைவரின் பெயரை வைத்துக்கொண்டு கோழையாக தற்கொலை செய்து கொண்டாய்....
உயிரென நினைத்து என்னையும் விட்டு விட்டாயா? நட்பென நினைத்திருந்தால் அழைத்திருப்பாய் ....
இன்பமும் துன்பமும், இரவு பகல் என முரணாய் வந்தபோது கலங்காத நீ இப்பொது காரணம் இன்றி காற்றிலே கலந்தது ஏனோ.....
தனிமை பயணமாய் இருப்பதால் தினம் தினம் பயந்து பயந்து வாழ்கிறேன், வழி நடந்த நீ இல்லாத காரணத்தால்...
யாரிடமும் விட்டு தராத 8 வருட நட்பை ஏளனமாய் விட்டு சென்றாய் ... ரணப்பட்டு கிடக்கின்றேன்னடி .... இன்று நீ மறைந்த நாள் அல்ல என்னை மறந்த நாள் .....

எழுதியவர் : Sweetyg3 (23-Aug-14, 8:11 pm)
Tanglish : anbulla paarathikku
பார்வை : 84

மேலே