உள்ளத்தினுள்ளே இருப்பது சந்தோசம்
பரந்து விரிந்த சமுத்திரத்தில்
தனித்தேச்சென்றதாம் குட்டிடால்பின் ஒன்று.
அதனைப்பார்த்த அம்மாதிமிங்கலம் ஒன்று
அன்புடனும் கவலையுடனும் வினவியதாம்
அன்புக்குழந்தாய் ஆபத்துநிறைந்த இப்பாதையில்
தனியே எங்கு செல்கின்றாயென
குட்டிடால்பின் துணிச்சலுடன் சொல்லியதாம்
அம்மாநான் சமுத்திரத்தைத் தேடிச்செல்கின்றேன்
ஆச்சிரியத்துடன் அம்மாதிமிங்கலம் சொல்லியதாம்
நீ இருக்குமிடமே சமுத்திரம்தானே என்று
இல்லைம்மா எனக்கு இதுவெறும்
தண்ணீர் எனச் சொல்லிச் சென்றாம்
சந்தோசத்திற்கென தனிவழியில்லை
நம்சந்தோசமே நம் வழிதான்
எடுத்த இப்பிறவி அமைந்த
நம் வாழ்க்கை அமைந்த
நம்குடும்பம் அமைந்த
நம் குழைந்தைகள் அமைந்த
நம் அலுவலகம் அமைந்த
நம் தோழர்கள் அமைந்த
நம் உறவினர்கள் அமைந்த
நம் நாடு எல்லாமே நம்மை
சந்தோசத்திற்கு இட்டுச்செல்லும் பாதைகள்தான்
உள்ளத்தினுள்ளே இருப்பது சந்தோசம்