நண்பர்கள்

சிறகுகள் இன்றி பறக்கவும் முடியும்
நீர்நிலை இன்றி நீந்தவும் முடியும்
வெந்திடும் தீயில் குளிக்கவும் முடியும்
மின்னலின் கீற்றை பிடிக்கவும் முடியும்
நண்பன் ஒருவன் அருகில் இருந்தால்
உலகை முழுதாய் ஆளவும் முடியும்

அணைத்திடும் பொழுதில் அன்னையாய் - ஆறுதல்
தந்திடும் பொழுதில் தந்தையாய் - சின்ன
சண்டைகள் புரிவதில் தமையனாய் - புது
நம்பிக்கை தருவதில் ஆசானாய்
அப்பப்பா எத்தனை அவதாரங்கள் - ஒரு
தோழமையில் பல பரிமாணங்கள்

காதல் கூட சில பொழுதில்
கசந்து போவது உண்டு
குடும்ப உறவில் பல பொழுதில்
விரிசல் விழுவது உண்டு
கசந்த காதலை இனிக்கச் செய்வது
நட்பு என்னும் மருந்து
விரிந்த உறவை மறுபடி சேர்த்து - நட்பு
வைக்கும் இனிய விருந்து

பேதங்கள் இருந்தும் வாதங்கள் இருந்தும்
வேற்றுமை என்றும் கிடையாது - நட்பில்
இன்பங்கள் இருந்தும் துன்பங்கள் இருந்தும்
பிரிவு என்னும் சொல்லேது?

நட்பின் கடலில் குளிப்பதற்கு
நீச்சல் பழக தேவையில்லை
மூழ்கிப் போகும் நேரத்திலும்
நண்பன் இருக்கிறான் கவலையில்லை

எழுதியவர் : ஹரி (27-Aug-14, 10:46 am)
Tanglish : nanbargal
பார்வை : 234

மேலே