வரவேற்பு சென்ரியு

*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Aug-14, 10:16 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 84

மேலே