பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம்

பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

பூமாதேவியையும் பூசிக்கிறோம் என்ற,

உண்மையை மட்டும் உணராமல்...!

எழுதியவர் : கர்ணன் (29-Aug-14, 2:01 pm)
பார்வை : 2299

மேலே