அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அழகான வாழ்க்கை
ஆனந்தமாகத்தான் இருக்கின்றதா???
அழகான வாழ்கையில்
அழகியாய் பிறந்தேன்
அரசு மருத்துவமனையில்
அப்பன் பெயர் தெரியாதவளாய........
இலவசம் என்றாலே
இன்பம்தானே????
அரைமணி நேர சொற்ப
இன்பத்திற்கு இலவசமாய்
பிறந்த இலவச குழந்தைகள்???
பாத்திரம் தேய்த்தாவது
பாலூட்டி இருக்கலாம்
பாரம் என எனை
நினைத்து
குப்பைதொட்டிக்கு
தத்து கொடுத்துவிட்டாள்???
நான் பெண்ணாகிற்றே
ஐந்து வயதிலேயே
ஆடை வேண்டுமே
இல்லையெனில்
ஆபாச பொருளாகி விடுவேனே???
எச்சில் இலைகளை
மூடியும் விடவில்லை
சில கள்ளாடுகள்???
தெருவில் படுக்கவும் விடவில்லை
சில தெருநாய்கள்????
கிழிந்த உடையிலும் விடவில்லை
காமப்பார்வைகள்????
கையேந்துபவர்கள்
காசை மட்டும் கேட்பதில்லை
கருணையையும் தான்???
தட்டில் எழும் கசொலித்தான்
எங்களுக்கு ஆனந்தம்
அன்பு கொண்ட புன்னகைதான்
எங்களுக்கு ஆனந்தம்
திருமணங்கள் மண்டபங்களில் நடப்பதுதான்
எங்களுக்கு ஆனந்தம்
வேண்டாம் என்றும் துக்கி போடும் பொருள்தான்
எங்களுக்கு ஆனந்தம்
பிச்சை எடுப்பதிலும்
பெண்ணுக்கு இத்தனை
கவலைகளா?????
நாங்கள் ஆனந்த வாழ்கையை
தேடினால் இன்னொரு
இலவச குழந்தை/??????

எழுதியவர் : ilayarani (30-Aug-14, 3:36 pm)
பார்வை : 76

மேலே