பறந்து போகும் மனிதன்

காலங்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து
காற்றாய் பறக்கும் மனிதன்!

வேகத்திற்கு ஏற்ற உணவு உண்டு
வேடிக்கையாய் வாழும் மனிதன்!

உணவிற்கும் உடன்தேவைக்கும்
ஓயாது போராடும் மனிதன்!

தேவைகளை நிறைவேற்ற நாளும்
தேய்ந்து போகும் மனிதன் !

நிறைவேறா ஆசைகளை நிதம்
தேக்கி வைக்கும் மனிதன்!

ஆசைகளை அடைந்திடவே பல
வழி வகுக்கும் மனிதன் !

அடைந்து விட்ட ஆசைகளில்
மனம் ஒப்பா மனிதன்!

ஆசைகளே துன்பமாக மாறும்
நிலை அறியா மனிதன்!

துன்பம் வந்து சூழ்ந்தப் பின்னே
துவண்டு விழும் மனிதன்!

சூழ்ந்த அந்த துன்பத்திலே
உழன்று தவிக்கும் மனிதன் !

துன்பத்தினை போக்கிடவே
போக்கிடம் தேடும் மனிதன் !

போகும் இடம் வரும் முன்னே
வாழ்வை முடிக்கும் மனிதன்!

மொத்தத்தில் மனிதன் என்பவன்
காலம் என்னும் கரத்தில் இருக்கும்
காற்றாடி போன்றவன் !!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (2-Sep-14, 7:37 pm)
பார்வை : 85

மேலே