பிரிவு உபசாரம்
ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்த பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிடநல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன் என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான் சொன்னாரு என்றார்.