தனிமை வாடும் மலர்

நறவம் குடித்தாற் போல்
அற்ப வாழ்க்கை

குளவியாய் குறுகி போன
எண்ணங்களை எண்ணி

காந்தளாய் வலுவிழந்து கிடக்கும்
கற்பனைகள் ஆயிரம்

இருள் நாறியாய் இணைந்து
இருளில் வாழும் ஞாபகம்

அல்லியாய் மலர்ந்த கற்பனைகள்
அழிவாய் தோன்றும்

இலவமாய் விடியும் என்று ஏமாற்றமடைந்த
என் இதயம்


மலர் குறிப்புகள் :

தனிமை - தனி இம்மை
நறவம் - மது (கள்)
குளவி - சூரிய ஒளியில் வளராது
காந்தள் - தண்டு வலுவில்லை, பற்றுகொடி
இருள் நாறி - வண்டு ஈர்ப்பு
அல்லி - இரவில் மலர்ந்து காலையில் குவியும்
இலவம் - ஏமாற்றம்

எழுதியவர் : ஜோ. பிரான்சிஸ் சேவியர் (6-Sep-14, 1:44 pm)
பார்வை : 381

மேலே