காலத்தின் சூழ்நிலையா

பார்த்து பார்த்து சேர்த்ததாலே
பசங்களெல்லாம் படிக்கவச்சு
பதவியில வீற்றிருந்தும்
பெற்றோரை காக்காமல் விட்டுவிட

கனிந்தும் உதிராத
தளர்ந்த முதியவர்
சொத்த பிரித்தபின்னே
சொந்தம் மறந்துபோக

என்ன வாழ்க்கையென
எண்ணம் தடுமாற
நாதியற்று போனபின்னே
நாலு பேர் வருவாரோ சுமப்பதற்கு?

நடமாட்டம் உள்ளவரை
மண்ணு கூட நம் காலடியில்
நடக்காமல் படுத்துவிட்டால்
மண்ணும் ஏறி மிதிக்கும்

யாரோட தவறு இது?
படைத்தவனின் குறைபாடா?
பிள்ளைகளின் முறைகேடா?
காலத்தின் சூழ்நிலையா?

எழுதியவர் : கோ.கணபதி (6-Sep-14, 12:50 pm)
பார்வை : 53

மேலே